பழமையான தமிழ் மொழியை மத்திய அரசு நாட்டின் பொக்கிஷமாக கருதுகிறது-மத்திய அமைச்சர்

நாட்டில் எந்த மொழியையும் யார் மீதும் திணிப்பது தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் அல்ல என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பி.எம்.ஸ்ரீ திட்டத்தை எதிர்ப்பதால் தமிழ்நாடு அரசு ரூ.5000 கோடியை இழப்பதாக கூறியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு கல்விக்கான நிதியை விடுவிக்கச் செய்ய தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
இதற்கு பதிலளித்து மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், மாநில அரசுகள் அரசியலைக் கடந்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். பழமையான தமிழ் மொழியை மத்திய அரசு நாட்டின் பொக்கிஷமாகவே கருதுவதாக தெரிவித்துள்ள தர்மேந்திர பிரதான், நாட்டின் பன்மொழி பாரம்பரியத்தை மதிப்பது தான் தேசிய கல்வி கொள்கையின் பிரதான எண்ணம் என்றும் தெரிவித்துள்ளார்.
Tags : பழமையான தமிழ் மொழியை மத்திய அரசு நாட்டின் பொக்கிஷமாக கருதுகிறது-மத்திய அமைச்சர்