பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும் --வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி தகவல்..?

பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷக் தார் உடன் பேசிய வாங் யி, பாகிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய சுதந்திரத்தை நிலைநிறுத்துவதில் சீனா தொடர்ந்து நிற்கும் என கூறியிருக்கிறார். தற்போதைய சிக்கலான மற்றும் நிலையற்ற சர்வதேச சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஆசியாவில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் நீடிக்க வேண்டும் என்றும் வாங் யி தெரிவித்துள்ளார்.
Tags : பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும் --வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி தகவல்..?