அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு

by Editor / 15-04-2025 04:17:33pm
அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டியாகோ நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவான நிலையில், அமெரிக்காவின் பல பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.சான் டியாகோவிலிருந்து சுமார் 97 கி.மீ தொலைவில் இருக்கும் ஜூலியன் பகுதி, நிலநடுக்கத்தின் மையமாக இருந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். மக்கள் குறைவாக வசிக்கும் இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பெரியளவில் பாதிப்பு இருக்காது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கத்தால் சில இடங்களில் லேசான பொருட்சேதங்கள் ஏற்பட்டதாகவும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில், கலிபோர்னியாவில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

 

Tags :

Share via