தொடர் நிலமோசடியில் ஈடுபட்ட இருவர் கைது, அரசு அலுவலக முத்திரைகள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்.

திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எல்.கே.எஸ் நகரில் 04.11.2009 ம் தேதி, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பரப்பாடி பகுதியை சேர்ந்த அலெக்ஸ் ஆல்பர்ட் எட்வர்ட் என்பவரின் மனைவி எலிசபெத் ஜார்ஜ் (63) என்பவர் திருநெல்வேலி சந்திப்பு சிந்துப்பூந்துறையை சேர்ந்த முனியசாமி மகன் சந்திரசேகர் என்பவரிடமிருந்து நிலம் வாங்கி இருந்ததாகவும், போலியாக ஆவணங்கள் தயார் செய்து தனது நிலத்தில் கால்நடை கொட்டகை அமைத்துள்ளதாக பெருமாள்புரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் 01.03.2025 ஆம் தேதி கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வரும் திருநெல்வேலி மாவட்டம் தெற்கு வீரவநல்லூரை சேர்ந்த ஸ்டாலின் மகன் உதயகுமார் (47) மற்றும் பேட்டை கண்டியப்பேரியை சேர்ந்த வடிவேல் மகன் நாகராஜ் (48) ஆகிய இருவரும் சேர்ந்து பல்வேறு நில மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேற்படி நபர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை செய்ததில் சார்பதிவாளர், வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலக முத்திரைகள் மற்றும் ஆவணங்களை போலியாக தயார் செய்து தொடர்ந்து பல்வேறு நில மோசடிகளில் ஈடுபட்டு வந்ததுள்ளனர். மேற்படி நபர்களிடமிருந்து 14 போலி முத்திரைகள், ஆவணங்களை கைப்பற்றி பெருமாள்புரம் குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Tags :