ஆயிரக்கணக்கான பயணிகளை வெளியேற்றி நீர்வீழ்ச்சிநுழைவு வாயிலுக்கு நிரந்தரமாக பூட்டு.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை குண்டாறு அணை மேற்பகுதியில் அமைந்துள்ள கண்ணுபுளிமெட்டு
என்ற இடத்தில் பத்துக்கும் மேற்பட்ட தனியார் நீர்வீழ்ச்சிகள் செயல்பட்டு வருகின்றது.
குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கின் காரணமாக அனைத்து அருவிகளிலும் குளிக்க விதித்த தடையின் காரணமாக தனியார் அருவிகளுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்திருந்த நிலையில் திடீரென்று ஆய்வு மேற்கொண்ட கோட்டாட்சியர் லாவண்யா முறையான பாதுகாப்பின்றி தனியா நீர்வீழ்ச்சிகள் செயல்பட்டு வருவதாகவும் அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சுற்றுலா பயணிகளை வெளியேற்றி தனியார் அருவிகளின் நுழைவு வாயிலுக்கு நிரந்தரமாக பூட்டு போட்டு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
தனியார் நீர்வீழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குளித்து வந்த நிலையில் சுற்றுலாப் பயணிகளை சாரையாக வெளியேற்றி காவல்துறையின் உதவியோடு கோட்டாட்சியர் நடவடிக்கை எடுத்த நிலையில் வெளியூரில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் சிலர் தாங்கள் ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து வந்துள்ளதாகவும் முறையான முன்னறிவிப்பின்றி தங்களை வெளியேற்றுவதாகவும் கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து அதிகாரிகள் தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எனக்கூறி சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றினர்.
Tags : ஆயிரக்கணக்கான பயணிகளை வெளியேற்றி நீர்வீழ்ச்சிநுழைவு வாயிலுக்கு நிரந்தரமாக பூட்டு.