நாடுமுழுவதும் அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7% உயர்வு

by Staff / 01-04-2022 03:59:27pm
நாடுமுழுவதும் அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7% உயர்வு

நாடு முழுவதும் அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7 சதவீதம் உயர்த்தப்படுவதாக இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

 இதனால் வலி நிவாரணிகள் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் தொற்று நோய் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட 800க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை உயர்ந்துள்ளது .

அதேபோல் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் சில மருந்துகள் மற்றும் ஸ்டிராய்டுகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo