10 பாஜக எம்எல்ஏக்கள் ஒருமனதாக தேர்வு

by Staff / 31-03-2024 11:55:49am
10 பாஜக எம்எல்ஏக்கள் ஒருமனதாக தேர்வு

அருணாச்சல பிரதேசத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால், வாக்குப்பதிவுக்கு முன்னதாக முதல்வர் உள்பட 10 பாஜக எம்எல்ஏக்கள் தேர்தலில் போட்டியிடாமலேயே ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதில் முதல்வர் பெமா காண்டு, துணை முதல்வர் சவுனா மெயின் ஆகியோரும் உள்ளனர். வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடு முடிவடைந்ததையடுத்து, காண்டு மற்றும் 9 பேர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தலைமை தேர்தல் அதிகாரி பவன் குமார் சைன் அறிவித்தார். அந்த மாநிலத்தில் மொத்தம் 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

 

Tags :

Share via

More stories