அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழக வெற்றி கழக தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர்களான உடுமலை கே. ராதாகிருஷ்ணன், எம். சி. சம்பத்,கடம்பூர் சி ராஜ் ,என், ஆர் ,சிவபதி ஆகியோரும் இவர்களுடன் பாப்பிரெட்டிப்பட்டி கோவிந்தசாமி ,சங்ககிரி சுந்தரராஜ் ,வீரபாண்டி ராஜமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் மான்ராஜ் ,கலசப்பாக்கம் பன்னீர்செல்வம், சிவகாசி ராஜவர்மன் ,ஆற்காடு சீனிவாசன் உள்பட அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்களும் தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் என். ஆனந்த் தேர்தல் பணி மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ்அர்ச்சனா ஆகியோர் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர். கடந்த மாதம் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இணைந்த நிலையில் ,நான்கு முன்னாள் அமைச்சர்கள் இணைந்திருப்பதன் மூலம் அ.தி.மு.க பலகீனமாகி கொண்டிருக்கிறது என்பது நிதர்சனம் .
Tags :


















