ஆன்லைன் கேமிங்கிற்கு 28% வரி விதிக்க மக்களவை ஒப்புதல்
ஆன்லைன் கேமிங், கேசினோ மற்றும் குதிரை பந்தயம் ஆகியவற்றுக்கு 28 சதவீத வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்துள்ளது. இந்த மசோதாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். மக்களவையில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (திருத்தம்) மசோதா, 2023 மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (திருத்தம்) மசோதா, 2023 ஆகியவை சபையில் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டன. மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளில் இந்த திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags :