புஸ்ஸிஆனந்த் கைது-தவெகவினர்.போராட்டம்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆளுநரிடம் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாகவும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்து இருப்பதன் காரணமாகவும் மூன்று பக்கங்கள் அடங்கிய மனுவை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஒரு மணி அளவில் வழங்கினார். அவருடன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் உடன் இருந்தார் இந்நிலையில் காலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தம் கைப்பட எழுதிய கடிதத்தினுடைய நகல்களை தமிழகம் முழுவதுமுள்ள பள்ளி,கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் பல்வேறு நகரங்களில் கட்சி நிர்வாகிகள் விநியோகம் செய்ததாக கூறப்ப்டுகிறது.மேலும் ஆளுநர் சந்திப்பிற்கு பிறகு கட்சி பொதுச் செயலாளர் டி நகரில் கட்சி தொண்டர்களுடன் விஜய் கைப்பட எழுதிய கடிதத்தின் நகலை போலீசாரிடம் உரிய அனுமதியை பெறாமல் பொதுமக்களிடம் வழங்கியதன் காரணமாக காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
Tags : புஸ்ஸிஆனந்த் கைது-தவெகவினர்.போராட்டம்.