எண்ணூர் துறைமுகத்தில் இரண்டாம் கட்ட உருவாக்கத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பொருளாதாரம் விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு சென்னை எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் நாலாயிரத்து எம்பத்தி எட்டு புள்ளி 26 கோடி மதிப்பீட்டில் இரண்டாவது சரக்கு பெட்டக முனையும் அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டமானது பொது தனியார் பங்களிப்பு முறையில் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. ஜிஎஸ்டி வரிவுடன் சேர்த்து 4288.26 கோடி தனியார் பங்களிப்புடன் முதலீடு செய்யப்படும் என்றும் இது தவிர கடல் ஆழப்படுத்தும் பணிகளுக்காக காமராஜர் துறைமுக நிறுவனம் தனியாக ரூபாய் 4500 கோடியை செலவிடும் என்றும் மொத்தம் 900 மீட்டர் நீளம் 30 மீட்டர் அகலம் மற்றும் 18 மீட்டர் ஆழம் கொண்டதாக இந்த முனையும் அமைக்கப்படும் என்றும் இதன் மூலம் 400 மீட்டர் நீளமும் 24 ஆயிரத்து 3 46 சரக்கு பெட்டகங்களை சுமந்து வரும் திறமை கொண்ட மிகப்பெரிய சரக்கு கப்பல்கள் நேரடியாக வந்து செல்ல முடியும் என்றும் இந்தத் திட்டமானது 40 ஆண்டுகள் சலுகை கால அடிப்படையில் செயல்படுத்தப்படும் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எண்ணூர் தொழில்துறை மண்டலம் மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் ஆட்டோ மொபைல் மின்னணுவியல் பொறியியல் மற்றும் ரசாயனப் பொருட்களின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்திற்கு இந்த திட்டமானது பெரும் உறுதுணையாக இருக்கும் என்றும் கட்டுமான பணிகளின் போது சுமார் 75 பேருக்கும் செயல்பாட்டுக்கு வந்த பிறகு சுமார் 800 பேருக்கும் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு உருவாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :


















