தங்கையை பிரிந்து வாழ்ந்ததால் கொலை: 3 பேர் கைது

சென்னை மேற்கு மாம்பலம், எல்ஐஜி பிளாட்ஸ் பகுதியில் வசித்து வந்தவர் கலையரசன் (23). இவர் கடந்த 15-ம் தேதி அதிகாலை அசோக் நகர், 35-வது தெருவில் நின்றிருந்தார். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கலையரசனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.
படுகாயங்களுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கலையரசன் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்த கொலை விவகாரம் தொடர்பாக அசோக் நகர் போலீஸார் வழக்கு பதிந்து, அசோக் நகர், புதூர் 13-வது தெருவைச் சேர்ந்த சஞ்சய் (19), அவரது அண்ணன் சக்திவேல் (20), உறவினர் மேற்கு மாம்பலம் சுனில் குமார் (20) ஆகிய 3 பேரை கைது செய்தனர். விசாரணையில் தங்கையுடன் வாழாமல் பிரிந்து வாழ்ந்ததற்காக கொலை செய்தது தெரியவந்தது.
Tags :