மசூதி மீது கல்வீச்சு.. பரபரப்பு

குஜராத் மாநிலம் வதோதராவில் ஸ்ரீராம நவமியையொட்டி நடைபெற்ற பேரணியில் பங்கேற்றவர்கள் மசூதி மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியா முழுவதும் ஸ்ரீராம நவமியையொட்டி பல்வேறு கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. குஜராத் மாநிலம், வதோதராவில் உள்ள ஃபதேபுராவில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்ட நிலையில் திடீரென சிலர் பேரணியில் சென்ற பக்தர்கள் மசூதி மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Tags :