by Staff /
03-07-2023
02:06:12pm
ஆஸ்திரேலியாவில் மனநலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக எம்டிஎம்ஏ மற்றும் மேஜிக் காளான்களை மனநல நிபுணர்கள் நோயாளிகளுக்கு வழங்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் மனநலப் பிரச்னை உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க சைகடெலிக்ஸைப் பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாக்கிய உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா மாறும். ஜூலை 1 முதல், உரிமம் பெற்ற மனநல மருத்துவர்கள் எம்டிஎம்ஏ கொண்ட மருந்துகளை பரிந்துரைக்க முடியும். அதே போல் சைலோசைபின் அல்லது மேஜிக் காளான் பயன்படுத்தப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மருந்துகளை மருத்துவமனை அல்லது மருத்துவர்கள் மட்டுமே கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags :
Share via