by Staff /
03-07-2023
02:28:07pm
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் ஒரு சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. வெங்கல் படுவைச் சேர்ந்த மலாவத் ரெட்டி (வயது 34) என்பவர் தனது மூன்று வயது மகன் நிதினுடன் உறவினர் வீட்டுக்குச் சென்றார். திரும்பி வரும் வழியில் சதாசிவநகர் வனப்பகுதியில் சாலை விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மலாவத் ரெட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அறியாத சிறுவன் அழுது கொண்டே தந்தை தூங்குகிறார் என்று நினைத்து எழுப்ப முயன்ற போது அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
Tags :
Share via