இரவு முழுவதும் இடைவிடாது கொட்டிய கனமழை... சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர்...

by Admin / 21-08-2021 02:28:45pm
இரவு முழுவதும் இடைவிடாது கொட்டிய கனமழை... சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர்...

தலைநகர் டெல்லி மற்றும் ஹரியானாவில் நேற்று இரவு முதல் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.
 
தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றுயுள்ள பகுதிகளில் கடந்த 10 நாட்களாக வறண்ட வானிலையே காணப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை இடைவிடாது கன மழை கொட்டி தீர்த்தது.

இதனால் டெல்லி பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலைகளில் தேங்கி நிற்கும் தண்ணீரில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் தவிப்புக்கு ஆளாகினர்.

இதேபோல் பால உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் அதிகளவு தேங்கி நிற்பதால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
 
விஜய் சவுச், ஆசாத்பூர், கன்னாட் போன்ற பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதேபோல் அண்டை மாநிலமான ஹரியானாவிலும் விடிய விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.

 

Tags :

Share via

More stories