திடீர் தீ விபத்து.. ரயிலில் இருந்து குதித்த பயணிகள்

கோலாப்பூர்-மும்பை மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. புகை மற்றும் வாசனையால் பயந்துபோன பயணிகள், உடனடியாக சங்கிலியை இழுத்தனர். சிலர் ரயிலில் இருந்து குதித்து தங்கள் உயிரைக் காப்பாற்ற முயன்றதாக கூறப்படுகிறது. பஞ்சகங்கா பாலம் அருகே ரயில் நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால், ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக மும்பைக்கு புறப்பட்டது. பிரேக் ஷூ மட்டுமே எரிந்ததாகவும், மற்ற பாகங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
Tags :