சனீஸ்வரர் கோயில் போலி இணையதளம் - அர்ச்சகர் கைது

புதுச்சேரி: பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் பெயரில் போலி இணையதளம் செயல்பட்ட விவகாரத்தில், கோயில் அர்ச்சகர் கைது செய்யப்பட்டுள்ளார். சனீஸ்வரர் கோயிலுக்கு வர முடியாதவர்கள், கோயில் இணையதளத்தில் பதிவு செய்யும் பக்தர்களுக்கு பிரசாதம் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், பணம் செலுத்திய பிறகும் பிரசாதம் வரவில்லை என புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் போலி இணையதளம் மூலம் பிரசாதம் அனுப்பி வந்ததும், பெண் ஒருவருடன் சேர்ந்து அர்ச்சகரே போலி இணையதளம் நடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Tags :