கங்கை நதிக்கரையில் புனித நீராடியா பிரதமர் மோடி

by Editor / 13-12-2021 07:12:32pm
கங்கை நதிக்கரையில் புனித நீராடியா பிரதமர் மோடி

உத்தர பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் பிரசித்தி பெற்ற விஸ்வநாதர் ஆலயம்  உள்ளது. இந்த ஆலய  வளாகம் 800 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் கனவாக கருதப்படும் இந்த திட்டத்தின் கீழ் கங்கை நதிக்கரையில் இருந்து கோவிலை இணைக்கும் வகையில் லலிதா படித்துறையில் இருந்து விஸ்வநாதர் கோவில் வரை 320 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் உடைய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட அருங்காட்சியகம், நூலகம், பக்தர்கள் தங்கும் மையம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.இதற்காக உ.பி., சென்ற அவரை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். பின்னர் அங்கிருந்து கால பைரவர் கோவிலுக்கு சென்ற மோடி, ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தார். இதனைத்தொடர்ந்து படகில் சென்ற அவர், கங்கை நதியில் புனித நீராடினார்.


 

கங்கை நதிக்கரையில் புனித நீராடியா பிரதமர் மோடி
 

Tags :

Share via