நியூசிலாந்த் நாட்டில் 24 மணி நேரத்தில் 10 டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டநபரால் பரபரப்பு

by Admin / 13-12-2021 07:20:07pm
நியூசிலாந்த் நாட்டில்  24 மணி நேரத்தில் 10 டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டநபரால் பரபரப்பு

கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க பொதுமக்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சில நாடுகளில் 3-வது தவணை அல்லது ‘பூஸ்டர் ஷாட்’ போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நியூசிலாந்தில்  ஒரு நபர் ஒரே நாளில் 10 டோஸ் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்ட சம்பவம்  அதிர்ச்சியை ஏற்ப்டுத்தியுள்ளது.
 
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள்  கூறுகையில், நாங்கள் இந்த விஷயத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளோம்,ஏனெனில் ஒருவர் பல தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வதால் அவருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே அவரைப் பற்றி  தெரிந்தால், உடனே தெரிவிக்கவும். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தவும் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
 
ஆக்லாந்து பல்கலைக்கழக தடுப்பூசி நிபுணர் ஹெலன் பெடோயிஸ்-ஹாரிஸ் கூறுகையில், ''இதுபோன்ற ஏராளமான தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வதால் ஏற்படும் விளைவு குறித்த தரவுகள் எதுவும் தற்போது இல்லை. அதனால், ஒரு நாளைக்கு 10 டோஸ்களை எடுத்துக் கொள்ளும் ஒருவருக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என சொல்வது மிகவும் கடினம். ஆனால் அவ்வாறு எடுத்துக் கொள்வது நிச்சயம் பாதுகாப்பானது அல்ல'' என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories