ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில்வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் மணியால் பரபரப்பு
கோவில்பட்டி புது கிராமப் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் பொருட்களை போட்டு - நகராட்சி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் மணியால் பரபரப்பு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட புதுக்கிராமத்தின் மெயின் சாலையில் விரிவாக்க பணிக்காக அங்குள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற திடீரென நகராட்சி அதிகாரிகள் அப்பணியில் ஈடுபட்டனர். புது கிராமப் பகுதியில் மகேஸ்வரி என்பவர் நடத்தி வந்த டீ கடையை நகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்தினை கொண்டு இடித்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே நகராட்சி அதிகாரிகள் கூறியதால் சாலையின் ஓரத்தில் வைத்திருந்த பொருள்களை அகற்றி விட்டதாகவும், முறையாக ஆக்கிரமிப்புகளை அகற்றமால் தனது கடையை மட்டும் நகராட்சி அதிகாரிகள் வேண்டும என்றே இடித்து விட்டதாக கூறி மகேஸ்வரி கண்ணீருடன் சாலையில் பொருள்களை எடுத்து போட்டு, பெஞ்சில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.மேலும் இடிக்கப்பட்ட கடைக்கு ஓடி சென்று செங்கலை எடுத்து எறிந்தது மட்டுமின்றி தன்னுடைய கடை இடிக்கப்பட்ட ஆத்திரத்தில் நகராட்சி நிர்வாகத்தினை தனது வார்த்தைகளால் துளைத்து எடுத்தார் இதனை எடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்
.கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்
பேட்டி : மகேஸ்வரி
Tags :