அதிக மாத்திரைகளை சாப்பிட்டு இளம் பெண் தற்கொலை

திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. கல்லுப்பட்டி தாதன்குளம் இந்த ஊரைச் சேர்ந்த பாண்டியம்மாள் நர்சிங் முடித்து வேலை தேடிக் கொண்டிருந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக அதிக மாத்திரைகளை சாப்பிட்டு ஊர் அருகில் உள்ள இவரது தோட்டத்தில் மயங்கி கிடந்துள்ளார். கிராமத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பாண்டியம்மாள் பரிதாபமாக இறந்தார் இது குறித்து டி. கல்லுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :