சீட்டாட்டம் ஆடிய நபர்கள் கைது.
மதுரை பெருங்குடி காவல் நிலைய போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஆலங்குளம் தொட்டியப்பட்டி காலனி பகுதியில் சென்றபோது அங்கு பழனிச்சாமி(40), பாலமுருகன் (45), மற்றொரு பாலமுருகன் (35) ஆகியோர் சீட்டு விளையாடியது தெரிந்தது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து சீட்டுகள் மற்றும் ரூ. 600 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Tags :



















