ராமேஸ்வரத்தில் ரயில் பெட்டி பராமரிப்பு வசதி மீண்டும் துவக்கம் .
புதிய பாம்பன் பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று சமீபத்தில் நிறைவு பெற்றன. அதேபோல ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலும் மறுசீரமைப்பணிகள் நடைபெற்றன. இதன் காரணமாக போக்குவரத்து மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. சில ரயில்களின் ரயில் பெட்டி பராமரிப்பு பணிகள் மதுரையில் நடைபெற்று வந்தன. இதற்காக திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை நேரத்தில் மண்டபம் - மதுரை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் (06780) இயக்கப்பட்டன. தற்போது ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டி பராமரிப்பு வசதிகள் தயார் நிலையில் உள்ளன. இதன் காரணமாக திருப்பதி மற்றும் கன்னியாகுமரி ரயில்களின் ரயில் பெட்டி பராமரிப்பு பணிகள் ஜனவரி 17 முதல் மதுரைக்கு பதிலாக ராமேஸ்வரத்திலேயே நடைபெற உள்ளது. எனவே திங்கள் வெள்ளிக்கிழமைகளில் இயங்கி வந்த மண்டபம் - மதுரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (06780) சேவை ரத்து செய்யப்படுகிறது.
Tags : ராமேஸ்வரத்தில் ரயில் பெட்டி பராமரிப்பு வசதி மீண்டும் துவக்கம்