ரஷ்யாவிடமிருந்து இந்திய கொள்முதல் செய்யும் நிலக்கரியின் அளவு அண்மைக் காலத்தில் பல மடங்கு அதிகரிப்பு

by Editor / 19-06-2022 04:37:38pm
ரஷ்யாவிடமிருந்து இந்திய கொள்முதல் செய்யும் நிலக்கரியின் அளவு அண்மைக் காலத்தில் பல மடங்கு அதிகரிப்பு

ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் நிலக்கரி கிடைப்பதால் அங்கிருந்து இந்தியா கொள்முதல் செய்யும் நிலக்கரியின் அளவு அன்மை  காலத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளது. ரஷ்ய மீது  மேலை நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ள நிலையில் அங்கிருந்து 30 விழுக்காடு தள்ளுபடி விலையில் நிலக்கரி விற்பவர்கள் முன்வந்துள்ளனர். இதனால் கடந்த 20 நாட்களில் மட்டும் ரஷ்யவில்  இருந்து இறக்குமதி செய்த நிலக்கரி அளவு முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 6 மடங்கு அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் ரஷ்யாவில்இருந்து 20 நாட்களில் 222 கோடி டாலர் மதிப்புக்கு இந்தியா பெட்ரோலியம் இறக்குமதி செய்துள்ளது.

 

Tags :

Share via