போலீசார் தடுத்து நிறுத்தியதால்  விமான நிலையத்தில் சத்தீஸ்கர் முதல்வர் தர்ணா

by Editor / 05-10-2021 05:08:35pm
 போலீசார் தடுத்து நிறுத்தியதால்  விமான நிலையத்தில் சத்தீஸ்கர் முதல்வர் தர்ணா

சத்தீஸ்கர் மாநில முதலமைச்சரை உத்தரப்பிரதேச மாநிலத்தில் செல்லவிடாமல் காவல்துறையினர் தடுத்தனர்.  இதனை அடுத்து சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் விமான நிலையத்திலேயே தர்ணா போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


கடந்த சில நாட்களுக்கு முன்னர் உபியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின்போது மத்திய அமைச்சரின் மகனின் கார் ஒன்று திடீரென கூட்டத்திற்குள் புகுந்தது என்பதும் இதனை அடுத்து விவசாயிகள் ஒரு சிலர் மரணமடைந்தார் என்பதும் செய்தி வெளியானது.இந்த செய்தி நாடு முழுவதும் காட்டுத் தீயாக பரவிய நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு சென்று மரணம் அடைந்த விவசாயி குடும்பத்திற்கு ஆறுதல் கூறச் சென்றார். ஆனால் அவரை வழிமறித்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் பிரியங்கா காந்தியை அடுத்து சத்தீஸ்கர் மாநில முதலமைச்சரும் பூபேஷ் பாகல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் என்ற பகுதிக்கு செல்வதற்காக லக்னோ விமான நிலையத்திற்கு வந்தார். ஆனால் லக்னோ விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை விமான நிலையத்திலேயே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார். இதனால் விமான நிலையத்திலேயே அவர் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


சத்தீஸ்கர் மாநில முதலமைச்சரை உத்தரப்பிரதேச மாநிலத்தில் செல்லவிடாமல் காவல்துறையினர் தடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் விமான நிலையத்திலேயே தர்ணா போராட்டம் நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.


கடந்த சில நாட்களுக்கு முன்னர் உபியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின்போது மத்திய அமைச்சரின் மகனின் கார் ஒன்று திடீரென கூட்டத்திற்குள் புகுந்தது என்பதும் இதனை அடுத்து விவசாயிகள் ஒரு சிலர் மரணமடைந்தார் என்பதும் செய்தி வெளியானது. 


இந்த செய்தி நாடு முழுவதும் காட்டுத் தீயாக பரவிய நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு சென்று மரணம் அடைந்த விவசாயி குடும்பத்திற்கு ஆறுதல் கூறச் சென்றார். ஆனால் அவரை வழிமறித்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.பிரியங்கா காந்தியை அடுத்து சத்தீஸ்கர் மாநில முதலமைச்சரும் பூபேஷ் பாகல்  உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் என்ற பகுதிக்கு செல்வதற்காக லக்னோ விமான நிலையத்திற்கு வந்தார். ஆனால் லக்னோ விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை விமான நிலையத்திலேயே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார். இதனால் விமான நிலையத்திலேயே அவர் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.


விமான நிலையத்தின் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்திய நடத்தியதோடு அவர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எந்த அடிப்படையில் என்னை தடுத்து நிறுத்தினீர்கள் என போலீசாருடன் சத்தீஸ்கர் முதல்வர் வாக்குவாதம் செய்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த நிலையில் சத்தீஷ்கர் மாநில முதல்வர் மட்டுமின்றி இன்னும் ஒருசில மாநில முதல்வர்களும் உத்தரபிரதேசம் செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளதால் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via