மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்  நடை நாளை காலை வரை  சாத்தப்படும் - கோவில் நிர்வாகம்.

by Staff / 07-09-2025 03:28:50pm
மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்  நடை நாளை காலை வரை  சாத்தப்படும் - கோவில் நிர்வாகம்.


மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மற்றும் அதன் உபகோயில்களில் இன்று மத்திம காலதீர்த்தம், மத்திம காலஅபிஷேகம், மத்திம காலசுவாமி புறப்பாடு, 11.41 மணிக்கு நடைபெறும்.

இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணிக்கு மேல் கோவில் நடை சாத்தப்படும் என்பதால் பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாது இந்த நேரத்தில் பக்தர்கள், பொது மக்கள் தரிசனம் செய்யவோ, அர்ச்சனை செய்யவோஅனுமதி இல்லை.

நாளை திங்கள் கிழமை காலை  முதல் வழக்கம் போல் நடை திறக்கப்பட்டு சாமி தரிசனம் செய்யலாம்
மீனாட்சியம்மன் கோவிலுக்கு உட்பட்ட உபகோவில்களான தெப்பக்குளம் மாரியம்மன்கோவில், முக்தீஸ்வரர் கோவில், பைரவர் கோவில், வடக்குவாசல் அனுமார் திருக்கோயில், சிம்மக்கல் ஆதிசொக்கநாதர்கோவில்,  செல்லத்தம்மன்கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில், திருவாதவூர் திருமறைநாதர் சுவாமி கோவில், கொந்தகை தெய்வநாயகப் பெருமாள் கோவில் உள்ளிட்ட 21 கோவில்களின் நடையும் இன்று மதியம் 12.30 மணி முதல் நாளை அதிகாலை வரை்நடை சாத்தப்படும் - கோவில் இணை ஆணையர் அறிவிப்பு

 

Tags : மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்  நடை நாளை காலை வரை  சாத்தப்படும் - கோவில் நிர்வாகம்

Share via