இந்திய ஹாக்கி அணி-உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்கு தகுதி

by Admin / 08-09-2025 02:31:13am
இந்திய ஹாக்கி   அணி-உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்கு தகுதி

ஆசிய கோப்பை 2025  பீகார் ராஜ் கிரில் நடந்த ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்திய அணி தென் கொரியாவை நாளுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றதோடு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிக்கு இதுவரை 8 அணிகள் தகுதி பெற்றுள்ளன. .இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றதன் காரணமாக இந்த பட்டியலுக் குள்இடம் பெற்றது. ..போட்டியை பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து அணிகள் நடத்துகின்றன.. இதனைத் தொடர்ந்து 25 ஆம் ஆண்டு . அமெரிக்கன் கோப்பையை வென்ற அர்ஜென்டினாவும் ஐரோப்பா சாம்பியன்ஷிப் 2025 மூலம் ஜெர்மனியும் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.. அடுத்த ஆண்டு ஆப்பிரிக்காவில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் ஒரு அணியும் 2026 இல் நடைபெறும் ஹாக்கி உலகக் கோப்பை தகுதி பெற்றுச்செல்லும்.   மற்ற ஏழு இடங்களையும் குழு தீர்மானிக்கும்.

இந்திய ஹாக்கி   அணி-உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்கு தகுதி
 

Tags :

Share via