திமுகவுக்கு கெடு விதித்த அண்ணாமலை

"GET OUT MODI" என பதிவிட்டது தொடர்பாக திமுக ஐடி விங்கிற்கு நாளை காலை 6 மணி வரை கெடு" என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "நாளை காலை 6 மணிக்கு நான் "GET OUT STALIN" என எனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிடுகிறேன். மக்கள் எதை வரவேற்கிறார்கள் என பார்ப்போம். நீங்கள் நாளை காலை 6 மணிக்கு பதிவிடும் ட்வீட்டை விட எனது ட்வீட் அதிக வரவேற்பை பெறுகிறதா இல்லையா என பார்ப்போம். நாளை பாஜகவின் காலம்" என்று அவர் சவால் விடுத்துள்ளார்.
Tags :