முன்னாள் எம்.பி மஸ்தான் மாரடைப்பால் காலமானார்

by Staff / 22-12-2022 01:27:24pm
முன்னாள் எம்.பி மஸ்தான் மாரடைப்பால் காலமானார்

திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு செயலாளரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் மஸ்தான் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை சென்னை ஊரப்பாக்கம் பகுதியில் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது, மஸ்தானுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவையொட்டி, திமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via