புழல் ஏரியிலிருந்து இன்று காலை 9 மணிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது .
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி கன மழை காரணமாக அதன் கொள்ளளவான 21.20 அடி 3 300 மில்லியன் கன அடி கொண்ட கொள்ளளவில் தற்பொழுது 19 புள்ளி 69 மில்லியன் கன அடி நீர் உள்ளது .இந்நிலையில், கனமழையின் காரணமாக நீர் வரத்து அதிகரித்து வருவதின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புழல் ஏரியிலிருந்து இன்று காலை 9 மணிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது .ஏரிக்கு மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், அருகில் உள்ள புழல், மஞ்சம்பாக்கம், மணலி உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
Tags :