பஞ்சாப் சட்டபேரவையின் 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர்

by Editor / 27-06-2022 11:55:23am
பஞ்சாப் சட்டபேரவையின் 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர்

காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த பஞ்சாபை கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி முதல் முறையாக கைப்பற்றியது. இதையடுத்து பகவந்த் சிங் மான் முதல்வராக பதவியேற்றதை தொடர்ந்து பல சீர்திருத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.அதன்படி தேவையின்றி பிரபலங்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு முறைப்படுத்தப்பட்டது. அதன்படி பாடகர் சித்து மூஸ்வாலாவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதன் ஒரு நாள் கழித்து அவர் கேங்ஸ்டர் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.இந்த நிலையில் ஆளும் ஆம் ஆத்மி தலைமையில் பஞ்சாப் சட்டபேரவையின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. நிதியமைச்சர் ஹர்பல் சிங் சீமா சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 

 

Tags :

Share via

More stories