சென்னைக்கு வருகிறார் பன்னீர் செல்வம்

by Writer / 27-06-2022 11:52:54am
சென்னைக்கு வருகிறார் பன்னீர் செல்வம்


 டெல்லியிலிருந்து தம் சொந்த ஊரான தேனிக்கு மதுரைக்கு விமானத்தின் மூவம் சென்று அங்கிருந்து சாலைமார்க்கமாக தேனிக்கு சென்ற பன்னீர்செல்வத்திற்கு தொண்டர்கள் வழி நெடுக உற்சாக வரவேற்பு அளித்தனர்.மூன்று நாள்கள் தேனீயில் தங்கி தொண்டர்களுடனும் தம் சார்பான கட்சி நிர்வாகிகளுடனும் ஆலோசிக்க இருந்தநிலையில் ,நேற்று தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம் திங்கள் கிழமை காலை பத்து மணிக்கு நடைபெற உள்ளதுஎன்கிற செய்தி குறிப்பை அறிந்து இன்று அவசர அவசரமாக சென்னை விரைகிறார்.அவர் சென்னை வருவதற்கு
கிட்டதட்ட இரண்டு மணிக்கு மேலாகி விடும்.அதற்குள் ஈ.பி.எஸ். தரப்பில் கூட்டப்படும் கூட்டத்தில் பொருளாளர்பதவியிலிருந்து ஒ.பி.எஸை நீக்க உள்ளதாக தகவல்.கட்சியின் பொறுப்பாளர் கையெழுத்தின்றி கூட்டப்பட்ட கூட்டம்செல்லாது என்றும் அங்கு எடுக்கப்படும் எந்த முடிவும் சட்டப்படி செல்லாது என்றும் ஒ.பி.எஸ் தரப்பிலிருந்து வைக்கப்படும்கருத்து.எது எப்படியோ...அ.தி.மு.கவிற்குள் சுழன்றடிக்கும்  மூன்று சூறாவளி...சசிகலாவின் நேற்றைய சுற்றுப்பயணம்என்ன விளைவுகளை ஏற்படுத்த போகிறதோ..

 

Tags :

Share via