அர்ஜெண்டினா அதிபரை சந்தித்த பிரதமர் மோடி

ஜி-7 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி, முனீச் நகரில் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
தொடர்ந்து அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டசை சந்தித்த பிரதமர் மோடி இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, விவசாயம், பருவநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கை மற்றும் உணவு பாதுகாப்பு போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகள், அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், அறிவியல், தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து இரு நாட்டு தலைவர்களும் நடத்திய இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளை சேர்ந்த உயர்மட்டக்குழுவினரும் கலந்து கொண்டனர்.
Tags :