பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 28 பேர் பலி

by Staff / 29-05-2024 01:41:03pm
பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 28 பேர் பலி

பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்தில் சிக்கியது. இதில் 28 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 22 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டர்பட்டில் இருந்து குவெட்டா நோக்கி பயணித்த போது இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

 

Tags :

Share via