நோயை பரப்பும் கெட்டுப்போன பதுக்கி வைக்கப்பட்ட இறைச்சிகள் பறிமுதல்

by Editor / 26-07-2022 06:07:50pm
நோயை பரப்பும் கெட்டுப்போன பதுக்கி வைக்கப்பட்ட இறைச்சிகள் பறிமுதல்

தமிழகத்தில் 24 மணிநேரமும் சுற்றுலாப்பயணிகள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகவும்,அருவிகள் நிறைந்த பகுதியாகவும், சுற்றுலாப்பயணிகள் குளிக்கும் அருவிகள் நிறைந்த பகுதியாக விளங்கும் குற்றாலம் பகுதியில் நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றுக்குபின்னர்  இந்த ஆண்டு அனைத்து நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. சில இடங்களில் தங்குவதற்குக்கூட  விடுதி வசதிகளின்றி தென்காசிக்கு அருகே உள்ள விடுதிக்கு சென்று தங்கி குற்றாலம் குளிக்க வரும் சூழல் சுற்றுலாப்பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது.இங்கு வரும் சுற்றுலாபயணிகளின் நலனைக்கருத்தில் கொண்டு இங்குள்ள உணவகங்களில் பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு உணவு சம்பந்தமான புகார்கள் தொடர்ந்து செல்வதால்  இதன் ஒரு பகுதியாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவ்வப்போது அதிரடி நடவடிக்கை இறங்கியுள்ளனர் குற்றாலம் பராசக்தி கல்லூரி அருகே உள்ள பிரபலமான உணவகங்களில்  மட்டன், சிக்கன், மீன், போன்றவை குளிர்சாதன பெட்டிக்குள் பதப்படுத்தபட்டு பயன்படுத்தப்பட்டு வருவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து  அதிரடி சோதனை மேற்கொண்டனர்.இந்த சோதனையில் ஒன்றோடு ஒன்று ஒட்டி ஐஸ்கட்டி போல் இருந்த  மட்டன், சிக்கன், மீன், போன்றவைகளை   திடீரென ஆய்வுக்கு சென்ற உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 38 கிலோ பெருமான உணவுப் பொருட்களை கையகப்படுத்தி பறிமுதல் செய்தனர்,

 
 

நோயை பரப்பும் கெட்டுப்போன பதுக்கி வைக்கப்பட்ட இறைச்சிகள் பறிமுதல்
 

Tags : Seizure of disease-spreading spoiled stored meats

Share via