தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை

by Editor / 26-07-2022 05:17:18pm
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை

தூத்துக்குடியில் உள்ள புகழ்பெற்ற பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு வருகிற ஆக.5ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தூத்துக்குடியில் உள்ள புகழ்பெற்ற பனிமய மாதா  பேராலய பெருவிழா ஆகஸ்ட் 5ம் நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு 05.08.2022 (வெள்ளிக்கிழமை) தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. 

எனினும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது.இந்த விடுமுறைக்கு பதிலாக வரும் 13.08.2022 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர்  டாக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

 

Tags : Local holiday across Tuticorin district

Share via

More stories

Logo