செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு.

by Staff / 05-12-2023 04:12:16pm
செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு.

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான செல்வி ஜெ ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த செல்வி ஜெ. ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் மகேஷ், பால்ராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என் கே பெருமாள், ஜெயலலிதா பேரவை செயலாளர் என். கே. பி வரதராஜபெருமாள், அதிமுக மகளிர்அணி பிரியா, செல்வி உள்ளிட்ட ஏராளமான அதிமுக கட்சியினர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via

More stories