சென்னை- மதுரை வைகை விரைவு ரயில் சேவை மாற்றம்.

சென்னை எழும்பூர் - மதுரை வைகை விரைவு (12635) ரயில் சேவை 9 நாள்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. தாம்பரத்தில் பராமரிப்பு நடைபெறுவதால் வருகிற 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக செங்கல்பட்டில் இருந்து ரயில் புறப்படும். எழும்பூர்- திருச்சி இடையேயான ராக்போர்ட் விரைவு (12653) ரயில் 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக செங்கல்பட்டில் இருந்து புறப்படும்.
Tags : சென்னை- மதுரை வைகை விரைவு ரயில் சேவை மாற்றம்