வேளாங்கண்ணி - எர்ணாகுளம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்

by Editor / 23-05-2022 04:56:36pm
 வேளாங்கண்ணி - எர்ணாகுளம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்

06035/06036 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் வருகிற 4.06.2022 முதல் 06.08.2022 வரை (10 தடவைகள்)  சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இந்த ரயில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மதியம் 12.35 மணிக்கு எர்ணாகுளத்தில் புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்கு வேளாங்கண்ணி வந்தடையும் மறுமார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு வேளாங்கண்ணி புறப்பட்டு திங்கட்கிழமை மதியம் 12 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

மேற்கண்ட ரயில் முதற்கட்டமாக நாகப்பட்டினம் வரை இயக்கப்படும்,  நாகப்பட்டினம் -  வேளாங்கண்ணி இடையிலான  பகுதி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வுக்கு பின்பு வேளாங்கண்ணி வரை நீடிக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Weekly special train between Velankanni and Ernakulam

Share via