பாஜகவின் வெற்றி, ஒரு வரலாற்று சாதனை

by Admin / 11-03-2022 10:30:49am
பாஜகவின் வெற்றி, ஒரு வரலாற்று சாதனை

உத்தரப்பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியனது. இதில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

பஞ்சாபில் அபார வெற்றி பெற்ற ஆம் ஆத்மி 42% வாக்குகள் அள்ளியது - காங் 23% சிரோன்மணி 18% பாஜக 6% பஞ்சாபில் அபார வெற்றி பெற்ற ஆம் ஆத்மி 42% வாக்குகள் அள்ளியது - காங் 23% சிரோன்மணி 18% பாஜக 6%

உத்தரப்பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்டில் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. கோவாவில் சுயேட்சை ஆதரவுடன் ஆட்சியைப் பிடிக்கிறது பாஜக.

நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் 4 மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கிறது. இதுவரை உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளில் 274 தொகுதியிலும், மணிப்பூரில் 60 தொகுதியில் 31 இடத்திலும், 

உத்தரகாண்டில் 70 தொகுதியில் 48 இடத்திலும், கோவாவில் 40 தொகுதியில் 20 இடத்திலும் முன்னிலையில் இருக்கிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கிறது.

பாஜகவின் இந்த இமாலய வெற்றியை அடுத்து, பாஜக தொண்டர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். டெல்லி பாஜக தலைமையகத்தில் நடந்த வெற்றி விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று தொண்டர்களிடம் பேசினார். 

அப்போது, ''இது மகிழ்ச்சியான நாள், இது திருவிழா, இந்திய ஜனநாயகத்துக்கான திருவிழா. தேர்தலில் வாக்களித்த அத்தனை பேருக்கும் என்னுடய நன்றிகள். பெண்களும், சகோதரிகளும், இளைஞர்களும் முழு மனதோடு பாஜகவுக்கு வாக்களித்துள்ளார்கள்.

இந்த தேர்தலில் முதல்முறை வாக்களித்த இளைஞர்கள் மன மகிழ்ச்சியோடு பாஜகவுக்கு வாக்களித்தார்கள். மார்ச் 10ம் தேதியில் இருந்தே இந்த ஆண்டு ஹோலி தொடங்கும் என‌ பாஜக செயல்வீரர்கள் எனக்கு உறுதியளித்தார்கள். அவர்கள் சொன்னதை நிரூபித்தார்கள். அவர்களுக்கு என்னுடய நன்றிகள்.

இரவு பகலாக உழைத்து இந்த வெற்றியை சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் தான் மக்கள் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறார்கள்.

தேர்தல் என்பது வெறும் எண்ணிக்கை அல்ல, அது வேதியியல். இந்தியாவின் ஏழை மற்றும் ஏழை மக்கள், பெண்கள், இளைஞர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என அனைவரும் பாஜக மற்றும் தன்னுடன் தங்கள் அன்பை வலுப்படுத்தி வருகின்றனர். 

இது பாஜக மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. கோவா, மணிப்பூர், உத்தரப்பிரதேசத்தில் இந்த தேர்தலில் வாக்கு சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

கோவாவில் அனைத்து கருத்துக் கணிப்புகளும் தவறு என நிரூபணமாகியுள்ளது. உத்தரகாண்டில் பாஜக புதிய வரலாற்றை எழுதியுள்ளது- முதல்முறையாக ஒரு கட்சி மாநிலத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது. 

அதேபோல், உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறார் யோகி ஆதித்யநாத். மீண்டும் அங்கும் ஆட்சியைப் பிடித்திருக்கிறோம்.

எங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடையாளம் தான் இந்த தேர்தல் முடிவு. மக்கள் எங்கள் ஆட்சிக்கு கொடுத்த சான்று தான் இந்த வெற்றி. கடைக்கோடியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் அரசின் திட்டம் கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் எங்கள் கனவு. அதை நிறைவேற்றி இருக்கிறோம். அடிப்படை தேவைகளை மக்களுக்கு செய்து கொடுத்திருக்கிறோம்.

 

Tags :

Share via