கத்தி முனையில் மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த நபர்கள்

சென்னை வளசரவாக்கம் ஏ.கே.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. சினிமா துணை நடிகை. இவர் வளசரவாக்கம் போலீசில் நேற்று புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது :-
நேற்று முன் தினம் இரவு எனது வீட்டின் கதவை தட்டிய அடையாளம் தெரியாத 2 இளைஞர்கள் திடீரென வீட்டிற்குள் புகுந்து பீரோவில் வைத்து இருந்த ரூ50ஆயிரம் ரொக்கம் மற்றும் நான் அணிந்திருந்த 10 கிராம் நகைகளையும் பறித்தனர்.
மேலும் கத்தி முனையில் எனது ஆடைகளை களைய சொல்லிய இளைஞர்கள் அதை செல்போன் மூலம் படம் பிடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர் என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வளசரவாக்கம் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கொள்ளையில் ஈடுபட்டு தப்பிய அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த செல்வகுமார், ராமாபுரம் பகுதியை சேர்ந்த கண்ணதாசன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் விஜயலட்சுமி பாலியல் தொழில் செய்து வருவதாக தெரியவருகிறது. அவருக்கு கண்ணதாசன் வாடிக்கையாளர்களை அழைத்து( புரோக்கர்) வருவதும் தெரியவந்தது.
இந்த நிலையில் விஜயலட்சுமியிடம் இருந்து நகை பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய கண்ணதாசன் நேற்று முன்தினம் இரவு விஜயலட்சுமியின் வீட்டிற்கு தனது கூட்டாளி செல்வகுமாரை வாடிக்கையாளர் போல அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் செல்வகுமார் விஜயலட்சுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதையடுத்து கத்தியை காட்டி மிரட்டிய இருவரும் விஜயலட்சுமியிடம் இருந்து 10 கிராம் நகை, 50 ஆயிரம் ரொக்கத்தை பறித்தனர்.
மேலும் விஜயலட்சுமியை செல்போனில் ஆபாச வீடியோ எடுத்து கொண்டு தப்பி சென்றதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் அவர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Tags :