சுருக்குமடி வலை விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு ஆணை

by Editor / 31-08-2021 04:27:39pm
சுருக்குமடி வலை விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு ஆணை

சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க மீனவர்களுக்கு உரிமை உண்டு என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், மாநில அரசு அதற்கு தடை விதித்துள்ள காரணத்தால், கடலோர கிராமங்களில் குழப்பம் நிலவுகிறது.

மேலும், இது கோஷ்டி மோதலாகவும் நடக்கிறது. சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி கடலூர், புதுச்சேரியில் உள்ள சில மீனவ கிராமங்கள் மீன்பிடித்து வருகிறது. இவ்வாறான சூழலில் சுருக்குமடி வலைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் பல பிரச்சனைகள் ஏற்பட்டு, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உரிய தீர்வு காண வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு இன்று நீதிபதி அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வர, சுருக்குமடி வலை விவகாரத்தில் மீன்பிடித்தொழில் செய்வது தொடர்பாக உரிய முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டு இருக்கிறார்.

 

Tags :

Share via

More stories