2 சகோதரர்கள் வெட்டிப் படுகொலை

புதுக்கோட்டை: ஆவுடையார்கோவிலில் 2 சகோதரர்கள் நேற்று இரவு (ஜூலை.24) வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்டவர்கள் கண்ணன், கார்த்தி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். முன்விரோதம் காரணமாக இரண்டு சகோதரர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. குற்றவாளிகளை விரைந்து பிடிக்க காவல்துறையினர் 6 தனிப்படைகளை அமைத்துள்ளனர்.
Tags :