ஒரு காவலரே தெருவில் இறங்கி போராட வேண்டிய நிலை - இபிஎஸ்

by Staff / 14-04-2023 11:55:17am
ஒரு காவலரே தெருவில் இறங்கி போராட வேண்டிய நிலை - இபிஎஸ்

சிறு பிள்ளையின் மருத்துவ சிகிச்சை என்பது கண்ணும் கருத்துமாக பார்க்க வேண்டியது, அதிலும் நமக்காக இரவு பகலாக பாதுகாப்பு பணியில் இருக்கும் ஒரு காவலரின் குழந்தைக்கு இன்னும் கவனத்துடன் இந்த அரசு செயல்பட்டிருக்க வேண்டும்‌ என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், எந்த பாதுகாப்பும் இல்லாமல் தமிழ்நாடு திணறி வருவதையும், ஒரு காவலரே தெருவில் இறங்கி போராட வேண்டிய நிலை இருப்பதையும், தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும் இந்த விடியா முதல்வர் எப்போது உணர்வார்? என கேள்வியெழுப்பியுள்ளார்.

 

Tags :

Share via