அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவர் தற்கொலை

by Editor / 24-07-2025 03:02:08pm
அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவர் தற்கொலை

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள விடுதியில் மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சபரீசன் (19) என்ற மாணவர் இன்று (ஜூலை.24) காலை விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கடந்த 10 நாட்களாக கல்லூரி பிடிக்கவில்லை என்று நண்பர்களிடம் சபரீசன் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via