படித்துறையில் கூடிய பக்தர்களை திருப்பி அனுப்பிய வட்டாட்சியர்
கோவை மஹாளய அமாவாசையை முன்னிட்டு மாவட்ட நிர்வாக உத்தரவை மீறி பேரூர் படித்துறையில் கூடிய பொதுமக்களை வட்டாச்சியர், காவல் துறையினர் திருப்பி அனுப்பி வருகின்றனர்.கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு கோவையில் உள்ள முக்கிய கோவில்களில் தர்ப்பணம் செய்ய பொதுமக்கள் கூட வாய்ப்புள்ளதால் முக்கிய கோவில்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று பேரூர் பட்டீஸ்வரர் கோவில், மருதமலை முருகன் கோவில், தேக்கம்பட்டி வனபத்திரகாளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சுவாமி தரிசனம் மற்றும் தர்பனம் செய்ய அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்தனர்.இந்நிலையில் அரசு உத்தரவை மீறி கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் ஆற்றக்கறையில் தர்ப்பணம் செய்ய பொதுமக்கள் அதிகளவு கூடி வருகின்றனர். அவர்களை வட்டாச்சியர் ரமேஷ் மற்றும் போலீசார் விரட்டி வருகின்றனர்.
Tags :