சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 950 ரூபாய் குறைந்துள்ளது.

by Admin / 02-02-2026 10:06:44am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 950 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 950 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 13 ஆயிரத்து 950 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து பதினோராயிரத்தி அறநூறு ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமிற்கு 20.00 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 300.00 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 3 லட்ச ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருந்த தங்கத்தின் விலை இப்பொழுது அதிரடியாக குறைந்து வருகிறது. டாலர் மதிப்பு அதிகரித்து வருவதின் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது இருந்த கவனத்தை மாற்றி இப்பொழுது டாலரை நோக்கி சென்று கொண்டிருப்பதால் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 950 ரூபாய் குறைந்துள்ளது.
 
Tags :

Share via