ஒரே நாளில் 153 பேர் கொரோனாவுக்கு பலி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் புதிதாக 20 ஆயிரத்து 768 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,07,112 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 17,576 பேர் பூரண நலன் பெற்றதையடுத்து, இதுவரையிலும் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 10,72,322 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 153 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 14,346 ஆக உயர்ந்துள்ளது.சென்னையில் மேலும் 6,078 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,45,966 ஆக உயர்ந்துள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :