இன்று ராஜ ராஜ சோழனின் சதய விழா அரசு விழாவாக,,

தஞ்சையிலிருந்து தம் ஆட்சியை கோலோச்சிய மா மன்னன் ராஜ ராஜ சோழனின் 1037 வது சதய விழா இன்று அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது .அதனால்,தஞ்சைக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுதமிழக நிலப்பரப்பில் சேர,சோழ,பாண்டிய அரசுகள் ஆண்டன .ஆனாலும் ,முப்படையுடன் கடற்படையையும் வைத்துஅந்நிய தேசத்தின் மீது படையெடுத்து வெற்றி கண்டு அந்நாட்டு நிலப்பரப்பை தன்னகப்படுத்தாமல் ஆளுமை கொண்டபேரரசாக சோழப்பேரரசு திகழ்ந்தது.வலிமையான படை கொண்டு ஆற்றலோடு போர்புரிந்த திறமை கொண்ட பேரரசுவாக ..சோழ வம்ச ஆட்சி திகழ்ந்தாலும்..கங்கை கொண்டான்.கடாரம் கொண்டான் என்று போற்றப்பட்டாலும்சக்கரவர்த்தியாகத்திகழ்ந்த ராஜராஜ சோழனின் புகழின் கொடுமுடியாக இருப்பது...அவனின் ஆட்சியில் உலகேவியக்கும் பெருவுடையார் கோவிலை ராஜராஜ பெருந்தச்சனின் பரம்பரை சிற்ப,கட்டட கலையை த் தன்னகப்படுத்திகோவிலை கட்டச்செய்ததுதான்.அவனின் புகழ் நிலைத்து நிற்பதற்கு வழி சமைத்தது.எத்தனையே மன்னர்கள் வீரத்தைமட்டுமே பெரிதாகக்காட்டி..மெய்கீர்த்தி பாடி மறைந்தபொழுது..அறிவை...தொழில் நுட்பத்தை பயன்படுத்த நினைத்தசிந்தனைதான் ராஜராஜசோழனை உயிர்ப்போடு பேச வைத்துக்கொண்டிருக்கிறது. அறிவை பயன்படுத்திக்கொள்ளும்அரசே சிறப்புடையது என்பதற்கு பெருவுடையார் கோவிலே சான்று.

Tags :